துப்பாக்கி சுடுதல் வீராங்கனை தற்கொலை – நான்கு மாதங்களில் 4 பேர் தற்கொலை செய்ததால் பரபரப்பு!

0
68
konika

துப்பாக்கி

வறுமையின் காரணமாக துப்பாக்கியை கடனாக வாங்கிக்கொண்டிருந்தார் கோனிகா. தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் போது சிக்கல்கள் இருந்ததால் நடிகர் சோனு ஒரு புதிய ஜெர்மன் துப்பாக்கியை பரிசாக வழங்கினார்.

அதிர்ச்சி

தேசிய துப்பாக்கி சுடும் வீராங்கனை கோனிகா தனது விடுதியில் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கி சுடுதல் வீரர்களில் இது நான்காவது தற்கொலை என்பதால் அதிர்ச்சியை அளிக்கிறது.

பயிற்சி

கோனிகா அர்ஜுனா விருது பெற்றவரான ஜாய்தீப் கர்மாகரிடம் பயிற்சி பெற்று வந்துள்ளார். கடந்த 10 நாட்களாக பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளவில்லை என அவர் கூறியுள்ளார்.

குற்றச்சாட்டு

கோனிகா இலக்கை சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த குற்றச்சாட்டையும் மறந்து நன்றாக தேறிவந்தார். கோனிகாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருந்ததாக அவர் கூறினார். இந்த செய்தியை கேட்டு மனமுடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

நன்றிகள்

துப்பாக்கியை கடனாக வாங்கிய கோனிகா தேசிய அளவிலான போட்டிகளில் பல சிக்கல்களை பங்கேற்கும் போது சந்தித்துள்ளார். நடிகர் சோனு சூட் ஒரு புதிய துப்பாக்கியை அவருக்கு பரிசாக வழங்கினார். அதற்கு கோனிகா அவருக்கு கிராமத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்தார். இவர் மாநில அளவில் பல மெடல்களை வாங்கியுள்ளார்.

கோரிக்கை

துப்பாக்கி சுடுதல் வட்டாரத்தில் இதுவரை நான்கு தற்கொலைகள் ஏற்பட்டதாகவும், இதற்கு முன்னர் ஏற்பட்ட தற்கொலைகள் பஞ்சாப்பை சேர்ந்த மூன்று வீரர்கள் என்பதும் தெரியவந்தது. இதனை விசாரிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்திருக்கிறது.

கடிதம்

போலீசார் கோனிகாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். கோனிகா தற்கொலை செய்து கொண்ட அறையில் இருந்த கடிதத்தில் மன வருத்தத்தில் இருப்பதாக எழுதியிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here