துளசிக்கு உகந்த மாதம் கார்த்திகை

0
73
thulasi special - karthigai deepam

துளசியானது கார்த்திகை மாதம் பௌர்ணமி அன்று அவதரித்ததாக புராணங்களில் குறிப்பிட்டுள்ளனர்.பௌர்ணமி அன்று துளசியை வழிபாடு செய்வது நல்லது என கருதப்படுகிறது.

கார்த்திகை மாதம் ஒரு தெய்வீக திருமணம் நடந்திருக்கிறது.வடக்கே துளசி பூஜை நடைபெறுகிறது.இந்த பூஜையானது 15 நாட்கள் நடைபெறும்.திருமண மக்களாக லக்ஷ்மியை துளசியாகவும், கிருஷ்ணனை விஷ்ணுவாகவும் பாவிப்பது ஐதீகம்.

மஹாலக்ஷ்மியின் சொரூபமான துளசியை திருமாலிற்கு அலங்காராம் செய்வார்கள்.துளசியை வாசம் செய்பவர் மஹாவிஷ்ணு என கூறுவர். துளசி அனைவர் வீடுகளிலும் காணப்படும் ஒரு வகை செடி ஆகும். இதன் நன்மைகள் பல அதனால் இந்த துளசியை ஒப்பில்லாத செடி என்று அழைப்பார்கள்.

இந்த உலகத்தில் எத்தனையோ வகை செடிகள், பூக்கள் உள்ளன. ஆனால் துளசியை விட சிறப்பு வாய்ந்தது எதுவும் இல்லை.

துளசியின் கதை:

தர்மவத்வசன் என்னும் அரசனின் மனைவி மாதவி 100 ஆண்டுகள் கர்ப்பமாக இருந்தாள். இவர்கள் மநு வம்சத்தை சேர்த்தவர்கள். அவளுக்கு பிறந்த குழந்தையானது மிகவும் அழகாக இருந்தது. அதற்கு துளசி என பெயர் சூட்டினர். அந்த குழந்தை வளர்ந்து பெரியவள் பெண்ணாக மாறியது. அந்த பெண் நாராயணரை திருமணம் செய்ய வேண்டும் என கடும்தவம் புரிந்தாள். பிரம்மன் அவளுக்கு ஒரு வரத்தை அளித்தது. பூமியில் நீ துளசி விருச்சமாக பிறந்து கிருஷ்ணரை திருமணம் செய்து கொள்வாய் என்று கூறி மறைந்தது.

அவர் கொடுத்த வரத்தின் படி துளசியை விஷ்ணு மணந்து கொண்டார். கண்ணன் துளசியின் சிறப்பையும் உலகறிய செய்தார்.ஒருமுறை சத்தியபாமாவுக்கும் ருக்மணிக்கும் கடும் போட்டி ஒன்று நடந்தது. அந்த போட்டியில் கண்ணன் துளசியின் சிறப்பை உலகறிய செய்தார் கண்ணன்.

துளசி இலைகளை தானமாக கொடுப்பதற்கு நிகரான மேன்மை வேறுஎதுவும் இல்லை.ஆயிரம் பசுக்களை தானம் செய்த புண்ணியம் கிடைக்க கார்த்திகை மாதம் துளசியை தானம் செய்யுங்கள்.

துளசியில் தெய்வம் குடியிருப்பதால் வீட்டில் அதனை வளர்க்கலாம். சுமங்கலி பெண்கள் துளசியை காலையும் மாலையும் வழிபாடு செய்வது நல்லது.

துளசி பறிக்கும் நேரம் :

அசுத்தமாக இருக்கும் போது துளசியை பறிக்க கூடாது. மேலும் அதன் பக்கமே போக கூடாது.பெளர்ணமி, அமாவாசை, துவாதசி, மாதப்பிறப்பு, வெள்ளி, செவ்வாய் ஆகிய நாட்களில் துளசியைப் பறிப்பது நல்லதாக இல்லை. நமது உடலில் எண்ணைத்தேய்த்துக் கொண்டிருக்கும் போதும் துளசியைப் பறிக்க கூடாது. மதியம், இரவு நேரங்களில் துளசியைப் பறிக்கக்கூடாது.

துளசியின் குணங்கள்:

நமது வீட்டில் வளர்க்கும் துளசியில் பலவகை மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. 10 துளசி இலையை சாப்பிடுவது நமது உடலில் உள்ள ரத்தத்தை சுத்தமாக மாற்றும்.கண்பார்வை குறைகள், சிறுநீரக கோளாறு போன்ற வற்றை நீக்கும்.இதயத்தை சீராக செயல்படுத்தும்.

அறிவியல் ரீதியான உண்மை:

வீடுகளில் சுத்தமான காற்றை நாம் சுவாசிக்க வீட்டில் துளசி வளர்க்க வேண்டும். புகையை தூய்மை படுத்தும் ஆற்றல் துளசிக்கு உண்டு.கடவுளை வழிபட செல்லும் போது துளசி சார்த்தி வழிபடுவது சிறப்பு. இந்த உலகில் துளசியின் பெருமை போற்றத்தக்கதாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here