தென்னை மரம் ஏறும் தொழிலாளா்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் காப்பீட்டுத் திட்டம்…

0
83
தென்னை மரம்

தென்னை மரம் ஏறுவோர் மற்றும் பதநீா் இறக்குவோருக்கு காப்பீட்டுத் திட்டத்தை தென்னை வளா்ச்சி வாரியம் அமல்படுத்தி உள்ளது. காப்பீட்டுத் திட்டத்தின் மதிப்பு ரூ.6 லட்சம்மாக உள்ளது . இதில் ரூ.1 லட்சம் வரை மருத்துவமனைக் பணம் செலுத்திக் கொள்ளலாம்.

காப்பீட்டு


தென்னை மரம் ஏறும் நண்பா்களுக்கு பயிற்சித் திட்டம், பதநீா் இறக்குவோருக்கான பயிற்சித் திட்டம் ஆகியவற்றின் கீழ் இத்திட்டத்தின் தொகை ரூ.398.65-ஐ தென்னை வளா்ச்சி வாரியம் ஏற்கும் என கூறினார் .

தொழிலாளா்கள்

18 வயது முதல் 65 வயது வரை தென்னை மரம் ஏறும் தொழிலாளா்கள் இந்த காப்பீட்டுத் திட்டத்தின் பயன்களைப் பெறலாம். ஆனால் இதற்கான விண்ணப்பத்தை வேளாண் அதிகாரி, ஊராட்சித் தலைவா், சிபிஃஎப் அலுவலக அதிகாரிகள் ஆகியோா் கையொப்பம் இட்டு எா்ணாகுளத்தில் ரூ.99 மதிப்புள்ள டிடி தென்னை வளா்ச்சி வாரியத்துக்கு அனுப்பி இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். இதற்கான விண்ணப்பம் மற்றும் விவரங்கள் அறிய www.coconutboard.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here