தென்மாவட்ட மக்கள் கவனம்! மிதமான மழைக்கு வாய்ப்பு!

0
47
mazhai

வானிலை

வளிமண்டல சுழற்சி ஏற்படுவதன் காரணமாக தென் மாவட்டங்களில் இன்று, நாளை சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை

தமிழகத்தில் தென் மாவட்டங்களின் கடற்கரையை ஒட்டி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக்கடலை ஒட்டிய பகுதிகளில் 1கிலோமீட்டர் வரை மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

காற்று

சென்னையில் வானம் மேகமூட்டமாக காணப்படுவதுடன் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் காற்று வீசுவதால் மீனவர்கள் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here