தென் ஆப்பிரிக்காவில் ஊரடங்கு ரத்தால் மக்கள் மகிழ்ச்சி!

0
63
ooradanku

கொரோனா

தென் ஆப்பிரிக்கா கொரோனாவின் பிடியில் சிக்கி 2 ஆண்டுகளாக ஊரடங்கு போடப்பட்டது. அந்த நாடானது 4 அலைகளை ஒன்றன்பின் ஒன்றாக சந்தித்தது. ஓமைக்ரானும் அங்கு தான் முதன் முதலாக கண்டறியப்பட்டது.

ஓமைக்ரான் பாதிப்பு

உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் ஓமைக்ரான் பரவி வந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில் இது உச்சம் தொட்டது. டிசம்பர் 21 ஓமைக்ரான் பாதிப்பு குறைந்து இறங்கு முகமானது.

ரத்து

2 ஆண்டுகளுக்கு முன்னதாக போடப்பட்ட ஊரடங்கு நேற்று முன்தினம் ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

பிறப்பித்த உத்தரவு

ஊரடங்கு சட்டம் நீக்கப்படும் என்றும், மக்கள் நடமாடும் நேரத்துக்கு எந்த கட்டுப்பாடுகளும் இருக்காது என அதில் கூறப்பட்டுள்ளது. உள்ளரங்குகளில் 1,000 பேரும், திறந்த வெளிகளில் 2,000 பேரும் கூடலாம் என்ற உத்தரவை பல தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.

மகிழ்ச்சி

இரவு நேரங்களில் மது பானங்கள் பரிமாறலாம் என அறிவிக்கப்பட்டதை ஹோட்டல் துறை மகிழ்வுடன் வரவேற்றுள்ளது. அடுத்த 15 நாட்களில் பள்ளிக்கூடங்கள் திறக்க உள்ள நிலையில் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here