தொழிற்சாலைகளில் ஆய்வு ; 550 பேரின் நிலை என்ன? சிறுநீரக செயலிழப்பு !!!

0
68
sirunerakam

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செங்காடு கிராமத்தில் எட்டு பேருக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று பரிசோதனை செய்யப்பட்ட 550 பேரின் முடிவுகள் வராததால் மக்கள் பயத்தில் உள்ளனர்.

சீறுநீரக செயலிழப்பு

இதனால் கிராமத்தில் சிறுநீரகம் செயல் இழந்த எட்டு பேருக்கு சென்னையில் உள்ள ராஜிவ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு செப்டம்பர் 1 தேதி சென்னையில் உள்ள ராஜிவ் அரசு மருத்துவமனை சிறுநீரக துறை சார்பில் 40 மருத்துவர்கள் சிறப்பு முகாம் அமைத்து பரிசோதனை செய்தனர்.

பரிசோதனை

இதனால் 600 க்கு மேல் உள்ளவர்களின் ரத்தம் சிறுநீர் ஆய்வுக்கு சேகரிக்கப்பட்டு அனுப்பப்பட்டது. அதில் 50க்கும் மேல் உள்ளவர்களுக்கு சிறுநீரகத்தில் உப்பின் அளவு அதிகமாக இருப்பது தெரிய வந்தது. 50 பேருக்கும் சிறுநீரக தன்மையை கண்டறிய பரிசோதனைகள் எடுக்கப்பட்டன.

கழிவு நீர்

சிறுநீரக பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கிராம மக்கள் பயத்தில் உள்ளனர். செங்காடு ஊராட்சியில் அலுமினியம் தயாரிக்கும் ஆலைகள் 15க்கும் மேல் தொழிற்சாலைகள் உள்ளன.

தொழிற் பூங்காக்கள்

இருங்காட்டுக்கோட்டை, பிளைப்பாக்கம், வல்லம், ஒரகடம் இந்த ஐந்து இடங்களில் சிப்காட் தொழிற் பூங்காக்கள் உள்ளது.

கிராமத்து குடிநீர்

செங்காடு கிராமத்தில் 16 தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் தண்ணீர் மற்றும் காற்றை பரிசோதனை செய்ய எடுத்துள்ளன. கிராமத்திற்கு குடிநீர் வழங்கும் ஆழ்துளை கிணற்று நீரை சேகரித்துள்ளன இருங்காட்டுக்கோட்டை, தண்டலம், மேவளூர்குப்பம், நெமிலி, செங்காடு, கீவளூர், காட்டரம்பாக்கம், பிள்ளைப்பாக்கம், வெங்காடு, வல்லம், மாத்துார், பால்நல்லுார், மாம்பாக்கம், ஆகிய ஊராட்சிகளிலும் தொழிற்சாலைகள் அதிகமாக காணப்படுகிறது.

water

மாசு கட்டுப்பாடு

ஆய்வகத்தில் பரிசோதனை நடந்து கொண்டிருக்கிறது. தொழிற்சாலைகளில் ‘ஆன்-லைன்’ மூலம் கண்காணித்து மாசு காட்டுப்பாடு தலைமை அலுவலகத்தில் இருந்து 24 மணி நேரமும் காற்றின் தரம் கண்காணிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here