தொழிற்சாலைகளை விட்டு இடம் மாற ஆலோசிக்கும் 2ம் நிலை நிறுவனங்கள்! காரணம் என்ன?

0
47
ravudi

ஸ்ரீபெரும்புதூர் அருகே தொழிற் பூங்காக்களில் உள்ள தொழிற்சாலைகளில் பல கோடி ஆயிரம் ரூபாய் ஒரு ஆண்டிற்கு வர்த்தகம் நடைபெறுகிறது.

சலுகைகள்

இந்த பகுதிகளில் தொழிற்சாலைகளை ஊக்குவிக்க சாலைகள் அமைக்கப்படுகின்றன. கட்டுமானம், மின்சாரம் என பல்வேறு சலுகை வழங்கப்படுகிறது. அங்கு ரவுடிகளின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

மிரட்டல்

புதிய அரசு பொறுப்பை ஏற்றதில் இருந்து சில ரவுடி கும்பல் தொழிற்பேட்டையில் இருப்பது நிறுவனங்களுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. நிறுவனத்தின் ஒப்பந்த பணிகளை வழங்க வேண்டும் என ரவுடிகள் மிரட்டுகின்றனர்.

ஆலோசனை

அமைச்சர்களின் பெயர்களை பயன்படுத்தி பேசுவதால் நிறுவனங்கள் என்ன செய்வது என தெரியாமல் தவித்து வருகிறார்கள். தொழிற்சாலைகளை வேறு மாவட்டத்திற்கு மாற்றலாமா என தொழிற்சாலை உரிமையாளர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.

நிர்வாகி கூற்று

அனைத்து சிப்காட் தொழிற்சாலைகளிலும் உலகளாவிய டெண்டர் வாயிலாக பணிகளை செய்ய முடியவில்லை என்றும் ரவுடிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் நிர்ணயிக்கும் விலைக்கு கட்டுப்பட வேண்டியுள்ளது என கூறினார்.

உண்மையான வியாபாரிகளுக்கு ஆர்டர் கொடுத்தால் வாகனங்களை வழிமறிப்பது, அரசு நிர்வாகங்கள் வாயிலாக புகார் கொடுப்பது போன்றவற்றை கையாண்டு வழிக்கு கொண்டு வருகின்றனர். உள்ளூர் ரவுடிகளை சமாளிக்க முடியாமல் இருக்கும் நிலையில் இது புதிய பிரச்சனையாக உள்ளது என அவர் கூறினார்.

சமூக ஆர்வலர்கள்

தொழிற்சாலைகள் சுதந்திரமாக செயல்பட மூத்த ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு அமைக்க வேண்டும். பிரச்சனைகள் ஏற்பட்டால் அதை குழுவிடம் தெரிவிக்க வசதி ஏற்படுத்த வேண்டும். சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

பின்னணி

தொழிற்சாலைகளில் மாமூல் கிடைக்காததாலும், உணவு, விடுதி ஒப்பந்தத்தை தட்டி பறிக்கும் நோக்கிலும் ஊழியர்களை தூண்டிவிட்டு போராட்டத்திற்கு வழிவகுத்ததாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here