நகைக்காக தம்பதி வெட்டிக்கொலை குறித்து போலீசார் விசாரணை!

0
50
police

காங்கயம் அருகே ரங்கம்பாளையம் என்னும் பகுதியை சேர்ந்த தம்பதி பழனிசாமி அவருடைய வயது 72. வள்ளியம்மாள் வயது 68. இவர்களுக்கு சந்திரசேகரன் எனும் மகனும் , மேகலா எனும் மகளும் உள்ளனர். இவர்கள் திருப்பூர் மற்றும் நத்தக்காடையூரில் இருவரும் வசித்து வருகிறார்கள்.

ரத்தக்காயத்தில் தம்பதிகள்

நேற்று காலையில் இவர்கள் வீட்டின் அருகே வசித்து வந்த ரமேஷ் என்பவர், பால் கறப்பதற்காக தோட்டத்திற்கு வாந்தபோது ரத்தக்காயங்களுடன் வீட்டில் தம்பதி கிடந்தனர். இது தொடர்பாக , சந்திரசேகரனை செல்போனில் தொடர்புகொண்டு ரமேஷ் இடம் தகவல் தெரிவித்தார்.

கொள்ளையடித்த மர்மநபர்கள்

தோட்டத்திற்கு வந்து சந்திரசேகர் பார்த்தபோது , தாயும் , தந்தையும் ரத்தகாயங்களுடன் உயிரிழந்து கிடந்தனர். வள்ளியம்மாள் அணிந்திருந்த ஏழரை பவுன் தாலிக்கொடியை மர்மநபர்கள் கொள்ளையடித்தது தெரியவந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காங்கயம் , குமரேசன் ஆகியோர் விசாரணையில் ஈடுபட்டனர்.

பிரேத பரிசோதனை

சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை காங்கயம் போலீஸார் தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here