நண்பர்களுடன் சுற்றுலா செல்ல முடியாததால் +2 மாணவர் தற்கொலை!

0
65
tharkolai

மாணவர்

சங்ககிரி அருகே கச்சேரிக்காடு பகுதியை சேர்ந்த சக்திவேல் தொழில் அதிபர் ஆவார். இவருடைய மகன் ருத்ரவிசாக் வயது 17 ஆகும். ஈரோடு பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் ப்ளஸ் 2 படித்து வந்துள்ளார்.

சுற்றுலா

விடுமுறை என்பதால் நண்பர்கள் சுற்றுலா செல்ல முடிவு செய்துள்ளனர். ருத்ரவிசாக் சுற்றுலா செல்ல பெற்றோரிடம் கூறிய போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

தற்கொலை

வேதனை அடைந்த ருத்ரவிசாக் வீட்டின் மேல் சென்று கதவை பூட்டிக்கொண்டு மின்விசிறியில் தூக்கில் தொங்கியதாக தெரிகிறது. சந்தேகம் அடைந்த வீட்டில் உள்ளவர்கள் கதவை தட்டி பார்த்தபோது கதவு திறக்கப்படவில்லை.

மருத்துவமனை

கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அங்கு மின்விசிறியில் ருத்ரவிசாக் தூக்கில் தொங்கியது தெரியவந்தது. அவரை மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர்கள் பையன் இறந்துவிட்டதாக கூறினர்.

விசாரணை

ருத்ரவிசாக் உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதது அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது. ருத்ரவிசாக் தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here