நாய்கள் கடித்து குதறிய குழந்தை தாயின் உருகவைக்கும் வீடியோ!

0
62
nai

நெய்வேலி

கடலூர் மாவட்டம் நெய்வேலி வட்டத்தை சேர்ந்த சேகர் சுரங்கத்தில் டெக்னிஷியனாக பணிபுரிகிறார். இவரது மகள் தமிழரசி கணவர் சபரிநாத்துடன் ஓசூரில் வசித்து வருகிறார்.இவர்கள் இருவருக்கு அயான்ஷ் என்ற மகன் உள்ளார்.

பூங்கா

கடந்த ஒரு மாதமாக அயான்ஷ் தாத்தாவுடன் தங்கியிருந்துள்ளார். நெய்வேலியில் உள்ள கோல்டன் பூங்காவிற்கு விளையாட சேகர் பேரனை அழைத்து சென்றுள்ளார்.

நாய்கள்

குழந்தை குடிக்க தண்ணீர் கேட்டதால் தண்ணீர் எடுக்க சேகர் சென்றுள்ளார். அவர் தண்ணீர் எடுத்து கொண்டு அங்கு வருவதற்குள் அங்கு சுற்றி திரிந்த தெருநாய்கள் குழந்தையை கடித்து குதறின.

மருத்துவமனை

அருகில் இருந்தவர்கள் நாய்களுடன் போராடி குழந்தையை பலத்த காயங்களுடன் மீட்டனர். புதுச்சேரியில் உள்ள மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்று அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

gallerye 023047302 29261035

வீடியோ

குழந்தையின் தாய் தமிழரசி வீடியோ பதிவு ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் என் குழந்தைக்கு ஏற்பட்டது போல் எந்த குழந்தைக்கும் நேரக்கூடாது என்றும் நாய்களை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கதறியபடி கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here