நார்சத்து அதிகமாக உள்ள சிவப்பு அரிசி ; சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா ???

0
83
aresi

*நம் உடல் நலத்தை பாதுகாக்கவும் நோயில் இருந்து தப்பித்துக்கொள்ளவும் வெள்ளையாக பொருள்களை உணவில் அதிகமாக சேர்க்கக்கூடாது.
*முக்கியமாக உப்பு, வெள்ளைச் சர்க்கரை, பால் ஆகியவற்றை குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
*அதை போல் அரிசி கார்போஹைடிரேட்டுகளை அதிக அளவு கொண்டுள்ளதால் உடல் பருமன் உள்ளவர்கள் மற்றும் நிரிழிவு நோய்யாளிகள் குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.வெள்ளை அரிசிக்கு பதிலாக அந்த காலத்தில் சிவப்பு அரிசி பயன்படுத்தி வந்தார்கள்.
*சிவப்பு அரிசிக்கு பல பெயர்கள் உள்ளன. சிவப்பு அரசியில் உள்ள ‘அந்தோசயனின்’ எனும் மூலக்கூறு இதற்கு சிவப்பு நிறத்தை அளிக்கிறது.

aresi

சிவப்பு அரிசி சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்

*மற்ற அரிசிகளில் இல்லாத அளவுக்கு சிவப்பு அரிசியில் குறைவான கார்போஹைட்ரேட், வைட்டமின் இரும்புச்சத்து மெக்னீசியம், துத்தநாகம், மாங்கனீசு ஆகிய சத்துகள் நிறைந்து உள்ளன.
*ரத்தத்தில் உள்ள கொழுப்புகளின் அளவைக் குறைகிறது.
*மிக எளிதாக ஜீரணமடையும் செரிமானக் கோளாறுகள் ஏற்படாது.
*நல்ல ஆரோக்கியமான சிவப்பு அரிசி குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சி உடல் உறுப்புகளின் செயல்பாடு சீராக இருக்கும்.
*உடல் எடையைக் குறைக்க உதவும். இதனுடன் உடற்பயிற்சியையும் மேற்கொண்டால் உடல் எடை எளிதாக குறையும்.
*உடல் பலம் பெற சிவப்பு அரிசி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.வெயில் காலத்தில் உடல் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படுவதால் உடல் குளிர்ச்சியை ஏற்படுத்துகிறது.தாய்மார்கள அதிக அளவு சிவப்பு அரிசி உண்டால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். உடல் பிரச்னைகளும் சரியாகும்.
*புற்றுநோயை தடுக்கிறது. எலும்புகளை வலுப்படுத்துகிறது.
*சிவப்பு அரிசியில் கஞ்சி, களி, தோசை, புட்டு, இடியாப்பம் ஆகியவை செய்து உண்ணலாம். காலை உணவாக சாப்பிடுவது நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here