நிலக்கரியின் அளவில் முறைகேடு! கண்காணிக்க திட்டம்!

0
71
nilakari

மின் வாரியம்

தமிழகத்திற்கு வரும் நிலக்கரியின் தரத்தை கணினி மென்பொருள் வாயிலாக கண்டறியும் திட்டத்தை செயல்படுத்த மின்வாரியம் ஆலோசனை செய்து வருகிறது.

நிலக்கரி

தமிழக மின் வாரியத்துக்கு 4,320 மெகா வாட் திறனில் அனல் மின் நிலையங்கள் ஐந்து உள்ளன. இந்த மின் நிலையங்களில் பயன்படுத்த 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவை. கப்பல் வழியாக வரும் நிலக்கரி மலை போல அங்கு கொட்டி வைக்கப்படுகிறது.

முறைகேடு

குறைவாக பயன்படுத்தினாலும் அதிகம் பயன்படுத்தியது போல சில முறைகேடுகள் நடந்து வருகிறது. இதனை கண்காணிக்க கணினி மென்பொருள் இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை.

அதிகாரி கூற்று

சுரங்கத்தில் இருந்து மின் நிலையம் வரும் வரை இணையதளம் வாயிலாக கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உடனுக்குடன் துல்லியமாக இதனை கண்டறிய முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆதாரம்

சுரங்கத்தில் இருந்து எடுக்கப்படும் நிலக்கரியின் தரம் 2 சதவீதம் மின் நிலையம் வரும் வரை மாறுபடலாம். இதை விட அதிகமாக மாறுபாடு ஏற்பட்டால் ஆதாரங்களுடன் தரமானதாக அனுப்ப கூறலாம்.

தடுப்பு

கப்பலில் இருந்து வருவதை தனித்தனியாக கொட்டும் போது எந்த கப்பலில் இருந்து வந்தது என்பதை துல்லியமாக கண்டறியலாம். இந்த திட்ட பணிகளை செயல்படுத்த ஆலோசித்து வருவதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here