நீட் தேர்வினை குறித்து எம்எல்ஏ வானதி சீனிவாசன் கருத்து!

0
48
neet

அறிக்கை

மருத்துவ படிப்புகளுக்கான நுழைவு தேர்வினால் சமூக நீதி பாதிக்கப்படுவதாக திமுக கூறுவதில் உண்மை இல்லை. சமூக நீதி என்பது இட ஒதுக்கீடுகள் சரியான முறையில் அமல்படுத்தப்படுவதாகும். இந்த இடஒதுக்கீட்டில் பழங்குடியின மாணவர்கள் அவர்களுக்குரிய மருத்துவ இடங்களை பெற்று வருகின்றனர்.

பாதிப்பு

நீட் தேர்வினால் அரசு பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டதாக எதிர்ப்பாளர்கள் கூறினர். நீட் தேர்வு அமல்படுத்தப்பட்ட சில ஆண்டுகளில் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது என அவர் கூறினார்.

மொழி

ஆங்கிலம், இந்தி தேர்வு மொழியாக இருந்தது பாதிப்புகளாக இருந்தது. பின் தமிழில் எழுதலாம் என வாய்ப்பு வழங்கிய பிறகு தமிழக மாணவர்கள் அதிகம் தேர்ச்சி பெற்று வருகின்றனர்.

நீதிமன்றம்

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் நீட் தேர்வு நடத்தப்படுவதாகவும், பாஜக அரசின் திட்டம் இல்லை என்றும் கூறினார்.

தேர்ச்சி

தமிழக அரசு நீட் தேர்வு வேண்டாம் என்ற முடிவை கைவிட்டு விட்டு வரும் ஆண்டில் தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெற உதவியாக வகுப்புகளை தொடங்கலாம் என்று வானதி சீனிவாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here