நீட் தேர்வு எழுதி தோல்வி! மாணவி தற்கொலை!

0
69
tharkolai

நீலகிரி

கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி நகரை சேர்ந்தவர் ஜெயா வயது 18 ஆகும். இவர் கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 படித்தார். டாக்டராக வேண்டும் என்ற லட்சியத்துடன் நீட் தேர்வினை எழுதி உள்ளார்.

தோல்வி

இந்த மாணவி 69 மதிப்பெண் பெற்று தோல்வி அடைந்ததால் வருத்தத்துடன் இருந்தார். பெற்றோர் அவரை திருப்பூரில் உள்ள அக்கா வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

விஷம் குடித்த ஜெயா

சில வாரங்கள் அங்கு தங்கியிருந்த ஜெயா பெற்றோரை பார்த்துவிட்டு வருவதாக கூறி பாரதி நகருக்கு வந்துள்ளார். 17ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்துள்ளார். பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

சிகிச்சை

மேல் சிகிச்சைக்காக கோவை மாவட்டம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்த போதும் பரிதாபமாக உயிரிழந்தார்.

கடிதம்

நீட் தேர்வில் வெற்றி பெற முடியாததால் நிம்மதியாக வாழ முடியவில்லை என்றும், மீண்டும் மன்னித்துவிடும் படியும் கடிதத்தில் எழுதி வைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here