நெல்லிக்காய் பயன்படுத்தி எடை குறைக்கும் வழி

0
76
AMLA JUICE FOR WEIGHT LOSS

குளிர்காலங்களில் உடல் எடை அதிகரிப்பதாக கூறுகின்றனர்.இந்த உடல் பருமனை கட்டுப்படுத்துவது சவாலான ஒன்று. நெல்லிக்காய் உடல் பருமனை கட்டுப்படுத்த சிறந்த பங்காற்றும்.

குளிர்காலத்தில் அதிகம் சாப்பிடுவது மற்றும் உடற்பயிற்சி செய்வதை குறைப்பது போன்றவை உடலை பருமனாக மாற்றி விடும்.

நெல்லிக்காயை வைத்து தேநீர் தயாரிக்கபடுகிறது. இதை தயாரிப்பது எளிய முறையாக அமைகிறது. ஒரு சிறிய பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீரை ஊற்றி கொள்ளவும். பிறகு சிறிதளவு நெல்லிக்காய் தூள் சேர்த்து கொள்ளவும். சிறிதளவு இஞ்சியை நறுக்கி சேர்த்து கொள்ளவும்.அதனுடன் சிறிதளவு புதினா இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கினால் நெல்லிக்காய் தேநீர் ரெடி. பிறகு இதனை ஆற வைத்து குடித்து வந்தால் உடல் எடையை கட்டுப்படுத்தலாம்.

நெல்லிக்காய் தேநீரை குடித்து வரும் போது அசிடிட்டி கோளாறுகள் நீங்கும். இது ரத்தத்தின் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும். நெல்லிக்காய் பிடிக்காதவர்களுக்கு இது சிறந்த ஒன்றாக விளங்குகிறது.

இந்த நெல்லிக்காய் தேநீரை குடிப்பதால் சிறுநீரகத்தில் உள்ள கற்கள் கரைகிறது. மேலும் கண்கள் பிரச்சனைகளுக்கும் சிறந்த நன்மை அளிக்கிறது.

நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதுடன், நமது கூந்தலை பாதுகாக்கிறது.

நெல்லிக்காயை பச்சையாகவும், தேநீர் செய்தும், பச்சடி செய்தும் சாப்பிடலாம்.நெல்லிக்காய் சாதம் கூட செய்து சாப்பிடுவது நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here