நோயாளிகள் தரையில் உறங்கியதால் எம்பி ஆவேசம்!

0
58
thirupoor

ஆய்வு

திருப்பூர் அரசு மருத்துவமனையில் கல்லூரி கட்டுமான பணி, நோயாளிகளுக்கான வசதிகள் குறித்து திருப்பூர் எம்பி நேற்று காலை ஆய்வு நடத்தினார்.

காப்பீடு திட்டம்

முதல்வரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை சந்தித்து பேசினார். அங்கு ஒரு முதியவரை தரையில் பெட் விரித்து படுக்க வைத்திருந்தனர்.

கேள்வி

இதனை பார்த்த எம்பி கல்லூரி டீன் முருகேசனிடம் அரசிடம் கேட்டு உங்களால் படுக்கை வசதி தர முடியாதா? வார்டுக்குள் வருவதற்கும், போவதற்கும் இடைஞ்சலாக படுக்கை உடைந்துள்ளதை மாத்தி புதுசா வாங்க வேண்டியது தானே என ஆவேசமாக கேட்டார்.

சமாளிப்பு

கூடுதல் படுக்கை கேட்டு கடிதம் அனுப்பியுள்ளதாகவும், நோயாளிகள் அதிகமாக இருந்ததால் தற்காலிகமாக படுக்க வைத்துள்ளதாக கூறி சமாளித்துள்ளார் கல்லூரி டீன். மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகளை பார்வையிட்டு பின் எம்பி ஆய்வை முடித்து சென்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here