பஞ்சாப் பொற்கோவிலில் சீக்கிய கொடியை அவமதித்தவர் அடித்து கொலை!

0
74
porkovil

பிரார்த்தனை

நேற்று மாலை அங்கு பிரார்த்தனை நடந்துகொண்டிருந்தது. அப்போது ஒருவர் கருவறைக்குள் நுழைந்து அங்கு வைக்கப்பட்டிருந்த வாளை எடுத்து கொண்டு குருவை நோக்கி சென்றுள்ளார்.

மக்கள்

அவரை அங்கிருந்த நிர்வாகிகள் பிடித்தனர். கருவறைக்குள் குதித்ததால் மக்கள் ஆத்திரமடைந்து கடுமையாக தாக்கியுள்ளனர். மக்கள் தாக்கியதால் அவர் படுகாயமடைந்து உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்

கோவிலுக்குள் நுழைந்த அந்த நபர் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். இவருக்கு 25-30 வயதிற்குள் இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு சரண்ஜித் கண்டனம் தெரிவித்து விசாரணைக்கு உத்தரவிட்டார்.

பரபரப்பு

இந்த சம்பவம் முடிவதற்குள் சீக்கிய கொடியை அவமதித்ததாக கிராம மக்கள் ஒருவரை பிடித்து தாக்கினர். அந்த நபரை போலீஸ் கஸ்டடியில் வைத்ததால் போலீசுக்கும் அங்கே இருந்தவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அந்த நபரை உள்ளூர் மக்கள் அடித்து கொன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here