பனிப்பொழிவு அதிகரித்ததால் கேரட்,பீன்ஸ் விலை அதிகரிப்பு!

0
77
kaikari

பனிப்பொழிவு

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பனிப்பொழிவு அதிகரிப்பால் காய்கறி விளைச்சல் குறைத்துள்ளது. மலைப்பகுதிகளில் விளையும், கேரட், பீன்ஸ், பீட்ரூட் போன்ற காய்கறிகள் விளைச்சல் குறைந்ததால் விலை அதிகரித்துள்ளது.

விலை மதிப்பு

கேரட் 88 ரூபாய், பீன்ஸ் 85 ரூபாய், நூல்கோல் 70 ரூபாய், உருளை 60 ரூபாய்க்கும் உழவர் சந்தையில் விற்பனையானது.

நிலப்பகுதி காய்கறி விலை

அவரைக்காய் 70 ரூ, புடலங்காய் 42 ரூ, கொத்தவரை 60 ரூ, பாகற்காய் 53 ரூ, காலிப்ளவர் 65 ரூபாய்க்கும் விற்பனை ஆகியுள்ளது.

வியாபாரிகள் கூற்று

உழவர் சந்தையில் கேரட் 88ரூ , பீன்ஸ் 85ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. அண்ணா மார்க்கெட் மற்றும் சில்லறை கடைகளில் நூறு ரூபாயை கடந்துள்ளதாக கூறுகிறார்கள்.

கவலை

தக்காளி தற்போது கிலோ 50 ரூபாய்க்கு விற்பனையாகி வரும் சூழலில் கேரட், பீன்ஸ்,பீட்ரூட் ஆகியவற்றின் விலை உயர்ந்திருப்பது கவலை அடைய வைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here