பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து! ஆன்மீக சுற்றுலா சென்ற பெண்களுக்கு ஏற்பட்ட விபரீதம்..!

0
70

சுற்றுலா

தூத்துக்குடி மாவட்டம் பிளாத்திகுளம் அருகே ஆன்மிக சுற்றுலா சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பெண்கள் காயமடைந்தனர்.
விழுப்புரத்தில் இருந்து 36 பெண் பக்தர்கள் ஆன்மிக சுற்றுலா செல்வதற்காக
சுற்றுலா பேருந்தில் கடந்த 23ம் தேதி புறப்பட்டுள்ளனர்.

கோவில்கள்

மேல்மருவத்தூர்,ராமேஸ்வரம் ஆகிய கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்து விட்டு இன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சிந்தலக்கரையில் உள்ள வெக்காளியம்மன் கோவிலுக்கு செல்வதற்காக வந்து கொண்டிருந்தனர்.

விபத்து

குமாரசக்கனபுரம் கிராமம் அருகே வந்துகொண்டிருந்த போது பேருந்தில் ஸ்டியரிங் லாக் ஆனதால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் பேருந்து சாலையின் இடதுபுறத்தில் இருந்த பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here