பாஜக தமிழர்களுக்கு எதிரான கட்சி என ஜோதிமணி டுவிட்டரில் அதிரடி!

0
47
jothimani

கூட்டம்

தமிழகத்தில் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என முதலமைச்சர் தலைமையிலான அரசு உறுதியாக இருக்கிறது. நீட் தேர்வை குறித்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் உடனான கூட்டம் நேற்றைய தினம் நடைபெற்றது.

1800x1200 coronavirus 17 1

முதல்வர் கூற்று

தமிழ்நாட்டு மாணவர்களின் நலன் காக்க நீட் தேர்விற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கூட்டத்தில் கலந்துகொண்ட சட்டமன்ற தலைவர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

தீர்மானம்

நீட் தேர்வினை முழுமையாக நீக்கிட வல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் முயற்சிகள் எடுக்கப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

ஜோதிமணி டுவிட்டர்

காங்கிரஸ் எம்பி ஜோதிமணி அவரது டுவிட்டரில் நீட் தேர்வுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஓரணியில் நிற்கிறது. பாஜக கட்சி நீட் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளதால் பாஜக தமிழர்களுக்கு எதிரான கட்சி என நிரூபித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

FotoJet 3

கருத்துக்கள்

நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சி என்றும், நுழைவுத்தேர்வு தேவை என உச்ச நீதிமன்றத்தில் வாதாடியது காங்கிரஸ் மூத்த தலைவர் என சமூக வலைதளவாசிகள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here