பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் தங்கம் எடுக்கும் மக்கள் – பலியான யானைகள்

0
47
thankam

அதிர்ச்சியான தகவல்

தேவலா பந்தலூரை ஒட்டிய வனப்பகுதியை பார்க்கும் பொது சிறு குழிகள் தென்படுகின்றன. சில இடங்களில் தார்பாய்கள் மூடியும் சில இடங்களில் கட்டைகளை கொண்ட அமைப்பாகவும் காட்சியளிக்கின்றன. இந்த இடங்கள் தங்கத்திற்காக தோண்டப்பட்ட இடங்கள் என்பது அதிர்ச்சியான தகவலாக உள்ளது.

பாதை

ஒரு நபர் மட்டுமே நுழைய கூடிய அளவிலான சிறு குழிக்குள் மண்ணுக்குள் வளைந்தும் நெழிந்தும் பாதை விரிந்து கொண்டே போகிறது. வெளிச்சம் புகாத சுரங்கங்களின் வாயிலை மண் மூடிவிடாமல் இருக்க வெளியே மண் மூட்டைகள் கொண்டு அடுக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் சுரங்கங்கள் தெரியாத அளவிற்கு மறைத்து வைக்கப்பட்டுள்ளன.

மண் படிவங்கள்

சுமார் 40 அடிக்கு சுரங்கம் தோண்டி பின்னர் பக்கவாட்டில் வெட்டப்பட்ட ஆழ சுரங்கத்துக்குள் மஞ்சள் வரிகளில் உள்ள மண் படிவங்களை கண்டுள்ளனர். இந்த தங்கத்திற்காகத்தான் சுரங்கங்கள் வெட்டப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள் வனத்துறையினர்.

தங்கம் பிரிப்பு

ஆபத்தான முறையில் இங்கு தங்கத்தை எடுக்கும் வேலையில் ஏராளமானோர் ஈடுபடுகிறார்கள். சுரங்கத்திற்குள் சென்று தங்க துகள்கள் உள்ள மண்கற்களை அள்ளி வந்து மண் அரவை ஆலைகளில் கொடுத்து பொடியாக்கி தண்ணீர் கொண்டு கழுவி தங்கத்தை பிரித்து எடுக்கிறார்கள்.

ஆங்கிலேயர்கள்

1800 ம் ஆண்டில் தேவலா பந்தலூர் அருகே 325 சதுரமைல் பரப்பில் தங்கத்தை கண்டறிந்தனர் ஆங்கிலேயர்கள். அப்போது 30 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் சுரங்கம் தோண்டி தங்கத்தை வெட்டி எடுத்தனர்.
காலப்போக்கில் தங்கங்கள் குறைந்ததால் அவற்றை ஆங்கிலேயர்கள் கைவிட்டனர். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் தங்கம் எடுக்கும் செயல்கள் கண்டும் காணாமலும் விடப்பட்ட நிலையில் அண்மையில் நடந்த சம்பவங்களால் தங்க சுரங்கங்கள் மீண்டும் கவனம் பெற்றுள்ளன.

யானை எலும்புகள்

ஒரு குட்டியானை சுரங்கத்தில் விழுந்து கூட்டத்தை பிரிந்தது.அதனை வனத்துறையினர் மீட்டு தாயிடம் சேர்த்தனர். அப்போது ஒரு குழியில் யானையின் எலும்பு கூடு கண்டுபிடிக்கப்பட்டது. கைவிடப்பட்ட சுரங்கங்கள் யானைகளின் உயிர்களை பறிக்கும் குழிகளாக உருமாறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து இந்த தங்க சுரங்கங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

வெடிபொருள்கள்

தங்க சுரங்கங்களை தோண்ட பயன்படுத்தும் வெடிபொருள்கள் தேவலாவில் அதிகம் கண்டடுக்கபட்டுள்ளது அபாயமாக பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here