பாலத்தில் விரிசல் ஏற்பட்டதால் ரயில்கள் ரத்து காரணமாக பயணிகள் அவதி!

0
58
rayil

பாலம்

வேலூர் மாவட்டம் பொன்னையாற்றின் குறுக்கே ஆங்கிலேயர்களால் ரயில்வே பாலம் கட்டப்பட்டது. சென்னை செல்வதற்காக ரயில்கள் இந்த பாலத்தின் வழியாக செல்கின்றன.

ஆய்வு

பாலத்தின் 38,39 வது பில்லர் விரிசல் ஏற்பட்டுள்ளதால் நேற்று மாலை 6.45 மணி முதல் பாலத்தில் ரயில்கள் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.

ரயில்கள்

பாலத்தில் விரிசல் காரணமாக ரேணிகுண்டா, அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் 23 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பெங்களூரு- சென்னை சதாப்தி
சென்னை – கோவை சதாப்தி
சென்னை -மங்களூரு
ரேணிகுண்டா- மைசூரு
ஜோலார்ப்பேட்டை – சென்னை
வேலூர் கண்டோன்மென்ட்- சென்னை கடற்கரை
ஜோலார்ப்பேட்டை- அருக்கோணம்

நாளை

மங்களூரு- சென்னை
ஆலப்புழா – சென்னை
ரேணிகுண்டா- மைசூரு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ரத்து செய்யப்பட்ட ரயில் முன்பதிவு கட்டணம் திருப்பி அளிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

வெள்ளம்

156 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பாலத்தில் போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தாலும் வெள்ளம் வந்ததாலும் விரிசல் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here