பாலியல் வன்கொடுமை; ரஞ்சித் கைது !!!

0
99
paliyal vankodumai

சினிமா ஆசையில் இருக்கும் பெண்களை தனது வலையில் சிக்க வைத்து பெண்களிடம் கவர்ச்சியான படங்களை வாங்கும் ரஞ்சித்.

சினிமா வாய்ப்புகள்

தயாரிப்பாளர்களின் நிறுவனங்களில் ஏறி இறங்கி சினிமா வாய்ப்பு தேடிய காலங்கள் போய் இன்றைய காலத்தில் சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஆகியவற்றின் மூலம் பிரபலமாகும் பெண்களை தேடி சினிமா வாய்ப்புகள் செல்கின்றன. சினிமா ஆசை கொண்ட பெண்கள் விதவிதமாக செல்ஃபி எடுத்தும் சினிமா பாடல்களுக்கு நடனமாடியும் அதனை பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறனர்.

பாலியல் வன்கொடுமை

திறமையை வெளிப்படுத்த சமூக வலைதளங்கள் வாய்பாக அமைகிறது.அந்த பெண்ணை நேரில் வரவைத்து பாலியல் வன்கொடுமை செய்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது. இளம்பெண்ணை சீரழித்தவரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சைபர் கிரைம்

இந்த நிலையில் சென்னையை சேர்ந்த ஒருவர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தமது 21 வயது மகளுக்கு சினிமா வாய்ப்புகள் தருவதாகக் கூறி பாலியல் தொந்தரவு அளித்து வருவதாக கூறப்பட்டிருந்தார். இதன் மூலம் விசாரணை நடத்திய போலீஸார் மொபைல் எண்ணை கண்காணித்து வந்தனர். பின்னர் சைபர் கிரைம் போலீஸார் இளைஞரை கண்காணித்து உதவினர். போலீஸார் அவரை கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம்

போலீஸ் நடத்திய விசாரணையின் போது அவர் திருப்பூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்பது தெரியவந்துள்ளது. சினிமா துறைகளில் வாய்ப்பு தேடும் பெண்களை பார்த்து அவர்களிடம் ரஞ்சித் மோசடியில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. பெண்களிடம் முதலில் பேசும்போது பெண் குரலில் பேசி சினிமா வாய்ப்பு இருப்பதாக கூறும் ரஞ்சித். பின்னர், அவர்களின் கவர்ச்சியான புகைப்படங்களை அனுப்புமாறும் கூறியுள்ளார். சினிமா ஆசையில் புகைப்படங்களை அனுப்பும் பெண்களை அதைவைத்து மிரட்டில் பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார்.

புகார் அளித்தல்

பெண் ஒருவர் ரஞ்சித்தின் வலையில் சிக்கி தமது புகைப்படங்களை அனுப்பி வைத்தார் . அந்த பெண்ணை அடிக்கடி மொபைலில் தொடர்பு கொண்ட ரஞ்சித் ஹோட்டலுக்கு செல்லலாம் என்று தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதையடுத்து மாடலிங் பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here