பிரதோஷ தினங்களின் சிறப்பு மற்றும் பிரதோஷ வழிபட்டால் ஏற்படும் நன்மைகள்…

0
63
shiva

மார்கழி மாதத்தில் இறைவனின் சிந்தனையிலும், வழிபாடுகளிலும் ஈடுபடுவதால் நாம் செய்த பாவங்கள் நீங்கும் நமது வாழ்வில் இன்பமான நிகழ்வு உண்டாகும் . பிரதோஷ தினங்களின் சிறப்பு என்ன என்பதையும், அப்பிரதோஷ வழிபட்டால் நமக்கு ஏற்படும் நன்மைகலையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மார்கழி மாதம்

சூரியன் தனுசு ராசியில் இருக்கும் மாதம் மார்கழி மாதம் ஆகும். எனவே இந்த மாதங்களில் வரும் பிரதோஷ தினம் மிகவும் சிறப்பானது . அதுவும் பிரதோஷம் குரு பகவானுக்குரிய வியாழக்கிழமை யில் பிறப்பது மிகவும் விசேஷமானதாகும் .

பிரதோஷ

பிரதோஷ தினம் அன்று மாலை 4 மணியிலிருந்து 6 மணிக்குள் சிவன் கோயிலுக்கு சென்று பிரதோஷ தினத்தில் செய்யப்படும் சோம சூக்த வலம் வந்து நந்தி பகவானையும், சிவனையும், சண்டிகேஸ்வரரையும் வணங்குவது நல்லது . பின்பு கோவிலில் உள்ள நவகிரக சந்நிதியில் இருக்கும் குரு பகவானை வணங்கியா பிறகு சிவனுக்கான பிரதோஷ வழிபாடுகள் செய்து கோயிலை ஒரு மூன்று முறை சுற்ற வேண்டும் பின் வீடு திரும்ப வேண்டும்.

குரு பகவான்

“பொன்” என்பது தங்கத்திற்கு அதிபதி குரு பகவான். எனவே மார்கழி மாதத்தில் வியாழக்கிழமையில் வரும் பிரதோஷத்தின் போது குரு பகவானையும், சிவன் பார்வதியையும் வணங்குவதால் உங்களுக்க பொன்னாபரணங்களின் சேர்க்கை உண்டாகும் என கூறுவர் . வறுமை நிலை குரையும் . உடல் மற்றும் மன ஆரோக்கியம் மாகும். பகை நீங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here