பிரபல நடிகை அமலாபால்; பாலிவுட்டில் தடம் பதிக்க உள்ளார் !!!

0
61
amalapal

மைனா என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் பிரபலமாகி தமிழ் சினிமாவில் அறிமுகமானரர் . இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு சினிமாவின் முன்னணி நடிகையாக உருவெடுத்தார். பல மொழிகளில் நடித்து வந்தார். முன்னணி கதாபாத்திரங்களுக்கு ஜோடியாக இணைந்து நடித்து வந்தார்.

அமலாபால்

பின்னர் மலையாளத்தில் பிரித்திவிராஜ் நடித்துள்ள ஆடுஜீவிதம் என்ற படத்தில் நடித்தார். தமிழில் இவரின் நடிப்பில் திரில்லர் படங்கள் தயாராகியுள்ளன ’அதோ அந்த பறவை போல’ ’கடாவர்’ ஆகிய திரைப்படங்கள் வெளியாக காத்திருக்கின்றன.

பாலிவுட்டில் களமிறங்கும் அமலாபால்

இதை தொடர்ந்து முதல் முறையாக பாலிவுட்டில் களமிறங்கி இருக்கும் அமலாபால். 1980களில் பிரபலமான பாலிவுட் நடிகைகளை மையப்படுத்தி உருவாகியுள்ள ரஞ்சிஷ் ஹி சஹி வெப் சீரிஸில் பர்வீன் பாபி என்ற கதாபாத்திரத்தில் அமலாபால் நடித்திருக்கிறார்.

வெப்சீரிஸ்

மகேஷ் பட் உருவாக்கியுள்ள வெப்சீரிஸில் தாஹிர் ராஜ் பாசின், அம்ரிதா பூரி மற்றும் பல முன்னணி நடிகர்கள் இதில் நடிக்கின்றனர். புஷ்படீப் பரத்வாஜ் அவரின் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப்சீரிஸை ஜியோ ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளன . இந்த வெப்சீரிஸ் வெளியாக இருப்பது குறிப்பிடப்பட்டுள்ளது..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here