பிரேசிலில் கனமழை ; 18 பேர் பலி!!!!

0
68
water

பிரேசிலில்ல் பெய்துவரும் கனமழையின் காரணமாக சுமார் 35 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கனமழை

பிரேசிலின் பாஹியாவில் சில தினங்களாக கனமழை கொட்டி வருகிறது. இந்த நிலையில் மழை தொடர்பான விபத்துகளின் காரணமாக 18 பேர் பலியாகி உள்ளனர். 280 பேர் கடுமையான காயமடைந்து உள்ளனர். மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் நூற்றுக்கணக்கான வீடுகள் தத்தளிக்கின்றன. சாலைகளில் தண்ணீர் தேங்கி இருப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

மக்களின் இயல்பு வாழ்கை பாதிப்பு

மழையின் போது பயங்கர காற்று வீசியதில் மரங்கள் சாய்ந்தன. மின் கம்பங்கள் விழுந்தன. மக்களின் இயல்பு வாழ்க்கைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

மீட்பு பணி

சுமார் 35 ஆயிரம் மக்கள் வீடுகளை இழந்து நிலையில் பாதுகாப்பு முகாம்களில் தங்குகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here