புது கண்டுபுடிப்பு !!! இரயில் தண்டவாளங்களில் இயங்கும் வாகனம்;

0
61
ரயில்

சாலையிலும் மற்றும் தண்டவாளத்திலும் இயங்கும் வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நேற்று ஜப்பான் நாட்டின் கையோ நகரில் தண்டவாளத்தில் இயங்கும் வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

தண்டவாளம்

சாலையில் செல்லும் போது இந்த ரயில் டயர் மூலம் செல்கிறது. தண்டவாளத்தில் செல்லும் போது டயர்கள் உயர்த்தப்பட்டு சக்கரங்கள் தண்டவாளத்தில் அமர்கின்றன. இரண்டாம் முறையில் இயங்கும் இந்த வாகனத்தை ஆஷா கோஸ்ட் ரயில்வே நிறுவனம் உருவாக்கியது.

கிராமங்கள்

இது குறித்து அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி ஷிகேகி மியூரா கூறியது இந்த வாகனம் போக்குவரத்து வசதி இல்லாத கிராமங்கள் மற்றும் வயதானவர்களுக்கு உதவியாக இருக்கும் .

ரயில்

முதற்கட்டமாக ஜப்பானில் உள்ள ஷிகோகு தீவில் இந்த வாகனம் இயக்கப்படுகிறது. சாலையில் மணிக்கு 60 கி.மீ. தண்டவாளத்தில் 100 கி.மீ., வேகத்திலும் செல்லும். இந்த ரயில் டீசலில் இயங்குகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here