புத்தாண்டை முன்னிட்டு கனமழை!

0
42
mazhai

மழை

ஜனவரி 1 ஆங்கில புத்தாண்டு தினமான அன்று வரை தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு

இன்று முதல் ஜனவரி 1 வரை கிழக்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. டிசம்பர் 31,ஜனவரி 1 சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வறண்ட வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் உள்ள சில இடங்களில் பனி மூட்டம் காணப்படும். சில இடங்களில் வறண்ட வானிலை வர வாய்ப்புள்ளது என அறிவித்துள்ளது.

சென்னை

சென்னையில் 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டமாகவும்,சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here