புறம்போக்கு நிலம் அபகரித்து ரூ.4.13 கோடி கனிமம் கொள்ளையடிப்பு!

0
70
nilam

நிலம்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே 109.43 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் அபகரிக்கப்பட்டதில் கனிம வளம் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

பட்டா

தாமரைக்குளத்தில் 60 ஏக்கர் 5 சென்ட், கெங்குவார்பட்டியில் 13ஏக்கர் 2 சென்ட் தனியாருக்கு பட்டா வழங்கப்பட்டது. இதுபற்றி பெரியகுளம் சப்-கலெக்டர் விசாரித்ததில் தாசில்தார்கள், சர்வேயர்கள் என ஆறு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

கொள்ளை

இவர்கள் ஆறு பேர் மற்றும் அதிமுக செயலாளர் உட்பட எட்டு பேர் என மொத்தம் 14 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். வடவீரநாயக்கன்பட்டியில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

அறிக்கை

81 ஏக்கர் பரப்பளவில் 4 கோடி 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மண் கிராவல் கனிமம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதற்கு 15 மடங்கு வரை அபராதம் விதிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.அவர்களிடமிருந்து 61.95கோடி ரூபாய் வரை அபராதம் வசூலிக்க வாய்ப்புள்ளது.

அபராதம்

2015 ம் ஆண்டில் கனிம வளம் கொள்ளையடிக்கப்பட்ட போது 16 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அதன் பிறகு தனியாரால் அபகரிக்கப்பட்டு கணினி பட்டா பெற்று இந்த கொள்ளை நடந்துள்ளது.

விசாரணை

கனிமவள கொள்ளை குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க கலெக்டர்க்கு உத்தரவிடப்பட்டது. அந்த அறிக்கையில் நில அபகரிப்பு குறித்தும், அதிகாரிகளின் தொடர்பு உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் இடம் பெற்றுள்ளன.

நடவடிக்கை

மேல்முறையீடு விதிகள் 17பி பிரிவின் கீழ் ஒன்பது அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க கடிதம் அனுப்பப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here