புலியை கண்டுபிடிக்க ‘கும்கி’ யானைகளுடன் தேடலில் இறங்கிய வனத்துறையினர்!

0
64
yaanai

கேரளா

தமிழக கேரள எல்லையில், கேரள மாநிலத்தில் மானந்தவாடி அருகே குருக்கன்மூலா உள்ளது. இந்த இடத்தில் 10 நாட்களுக்கும் மேலாக புலி பதினைந்து கால்நடைகளை வேட்டையாடி உள்ளது.

கண்காணிப்பு பணிகள்

வனத்துறையினர்,போலீசார், வருவாய் துறையினர் ஆகிய மூவரும் ஐந்து இடங்களில் கூண்டு வைத்துள்ளனர். கூண்டு வைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபிறகும் புலி சிக்கவில்லை.

கும்கி யானை

நேற்று முதல் இரண்டு கும்கி யானைகளை அனுப்பி உள்ளனர். இந்த யானைகளின் உதவியுடன் புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க துவங்கினர். வனத்துறையினர் கண்காணிப்பு கேமரா வைத்திருந்தனர். அந்த கேமராவில் கழுத்தில் காயத்துடன் புலி நடந்து சென்றது பதிவானது.

வனத்துறையினர் கூற்று

புலியானது வனவிலங்கு வேட்டைக்கு வைக்கப்பட்ட சுருக்கில் சிக்கியிருக்கலாம் என்றும், இதனால் காயம் ஏற்பட்டு கால்நடைகளை வேட்டையாடி வருகிறது என்றும் கூறினார். மேலும் விரைவில் புலியை பிடித்து சிகிச்சை அளிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here