பெங்களூருரில் ரூ.6 லட்சம் கொள்ளை; மர்ம நபர்கள் யார்?? போலீசார் விசாரணை !!!

0
68
கொள்ளை

பெங்களூருரில் உள்ள நிறுவனத்திற்குள் நுழைந்து ஊழியர்களை தாக்கி ரூ.6 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர். தலைமறைவான மர்ம நபர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.

தனியார் நிறுவனம்

போலீஸ் எல்லை பகுதில் நாகரபாவி பகுதியில் தனியார் நிறுவனம் ஓன்று உள்ளது. நிறுவனத்தில் மசாலா பொருட்கள் மளிகை பொருட்கள் மொத்த வியாபாரிகளிடம் இருந்து வாங்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் பின்புறம் தான் குடோனும் உள்ளது.

ஊழியர்களை தாக்குதல்

நேற்று இரவு நிறுவனத்தில் ஊழியர்கள் 2 பேர் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்பொழுது இரண்டு மோட்டார் சைக்கிள்களில் நான்கு மர்மநபர்கள் வந்தனர். அவர்கள் நிறுவனத்திற்குள் புகுந்து அங்கிருந்த ஊழியர்களிடம் அரிவாள், கத்தி ஆகிய ஆயுதங்களை காட்டி மிரட்டினார்கள்.

விசாரணை

மர்மநபர்கள் தாக்கியதில் இரண்டு ஊழியர்களுக்கும் காயம் அதிகமாக ஏற்பட்டது. வியாபாரம் மூலம் கிடைத்த ரூ.6 லட்ச பணத்தை கொள்ளையடித்து தப்பி சென்று விட்டனர். போலீசார் விசாரணைநடத்தி கொண்டு வருகின்றனர்.

போலீசார் வழக்கு பதிவு

இந்த சம்பவத்தில் நிறுவனத்தை பற்றி நன்கு தெரிந்தவர்கள் இருக்கலாம் என்று போலீசார் சந்தேகத்தில் உள்ளன. மர்மநபர்களை பிடிக்க கண்காணிப்பு கேமராக்களை எடுத்து ஆய்வு செய்து வருகிறார்கள். இதுபற்றி அன்னபூர்னேஷ்வரிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளன. தலைமறைவான மர்மநபர்களை தீவீரமாக தேடிவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here