பெண்களை கட்டாயப்படுத்தி தாம்பத்யம் இந்தியாவில் மிகப்பெரிய குற்றம்!

0
60
குற்றம்

வழக்கு

வலுக்கட்டாயமாக மனைவியுடனான தாம்பத்யத்தை கிரிமினல் குற்றமாக கருத வேண்டும் என ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்திய சட்டத்தில் கணவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள விலக்கை ரத்து செய்ய வேண்டும் என வழக்குதொடரப்பட்டது.

விசாரணை

இந்த வழக்கானது டெல்லி ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்துள்ளது. பெண் சார்பில் பேசிய வழக்கறிஞர் வலுக்கட்டாயமாக மனைவியுடனான தாம்பத்யம் மிகப்பெரிய பாலியல் வன்முறை என்று கூறியுள்ளார். திருமணம் என்ற கட்டமைப்பில் பல வன்கொடுமை நடைபெறுவதாகவும், அவை ஆராயப்படுவதில்லை என்றும் கூறினார்.

டெல்லி அரசு தரப்பில் வழக்கறிஞர் கூற்று

வலுக்கட்டாயமாக மனைவியுடன் நடக்கும் தாம்பத்யம் இந்தியாவில் நடக்கும் ஒரு கொடுமையான குற்றம் என்றும், திருமணம் ஆன, ஆகாத பெண்கள் சட்டத்தில் வித்தியாசமாக கருதப்படுகிறார்கள். வாதங்களை கேட்ட நீதிபதி வழக்கை ஜனவரி 10ம் தேதி ஒத்திவைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here