பெரும் விபத்தை சந்தித்து மறுவாழ்வு பெற்ற யாஷிகா

0
77
yasika

திரில்லர் படம்

கவுதம் ராகவேந்திரா இயக்கத்தில் ராஸ்கல் பிக்சர்ஸ் தயாரிப்பில் கிரிமினல்’ஸ் டைரி என்ற படம் தமிழ் ,தெலுங்கு,ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகிறது. நடிகர் ஆதி சுந்தரேஸ்வரன் ,ஜெகா,ராஜேஷ் சேது,கதையின் நாயகர்களாக மூவரும் நடிக்கின்றனர். குக் வித் கோமாளி புகழ் பவித்ரா லட்சுமி ,யாஷிகா ஆனந்த்,கதாநாயகிகளாக நடிகின்றனர்.

யாஷிகா

விபத்தில் சிக்கி மறுவாழ்வு பெற்றுள்ள யாஷிகா நடிப்பில் வெளிவர இருக்கும் படத்தில் யாஷிகா ஆக்சன் ஹீரோயினாக நடிக்கிறார்.

இயக்குனர் கவுதம் ராகவேந்திரா கூறுவது

இந்த படத்தின் தலைப்பு மட்டுமல்ல,திரைக்கதையும் படத்தில் இதுவரை ஒருவரும் காணப்படாத புதுமையானதாக இருக்கும். படத்தின் ஒவ்வொரு நிமிடமும் மிகவும் முக்கியமானது. படம் பார்ப்பவர்கள் ஒரு நிமிடம் படத்தை கவனிக்காமல் விட்டாலும் படத்தின் கதை புரியாமல் போய் விடும். படத்தை முழுமையாக பார்த்தால் மட்டுமே படத்தில் ஒளிந்திருக்கும் மர்மம் புரியும். இது யாஷிகாவிற்கு ஒரு முக்கியமான படமாக இருக்கும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here