பைக்குகளின் விலையை உயர்த்திய பழைய நிறுவனமான ராயல் என்பீல்டு!

0
53
bike

ராயல் என்பீல்டு

உலகின் பழமையான இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ராயல் என்பீல்டு நிறுவனம் புகழ்பெற்ற வாகனங்களின் விலையை உயர்த்தி உள்ளது.

இருசக்கர வாகனம்

நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் இருசக்கர வாகன மாடல்களாக கிளாசிக் 350, மீட்டியோர் 350, ஹிமாலயன் போன்றவை உள்ளன.

கிளாசிக் 350

தற்போதைய விலை உயர்வில் மிக சிறிய விலையை கொண்டதாக கிளாசிக் 350 பைக் உள்ளது. இந்த பைக்கின் விலையை ரூ 2,872 லிருந்து ரூ 3,332 வரை உயர்த்தி உள்ளது. ரெட்டி கிளாசிக் 350 தேர்வின் புதிய விலை ரூ 1.87 லட்சமாக மாறியுள்ளது. இதன் டாப் குரோம் பூச்சு வசதி கொண்ட கிளாசிக் 350 விலை 2.18 லட்சமாக உயர்ந்துள்ளது.

மீட்டியோர் 350

மூன்று தேர்வுகளில் விற்பனைக்கு கிடைக்கும் மீட்டியோர் 350 பைக் மாடலின் விலையையும் உயர்த்தியுள்ளது. ரூ 2,511- ரூ 2,752 வரை உயர்த்தியுள்ளது. முன்னதாக ரூபாய் 2.01 லட்சம் என்ற விலையில் கிடைத்தது தற்போது ரூபாய் 2.03 லட்சம் விற்பனை செய்யும் நிலை உருவாகியுள்ளது.

ஹிமாலயன்

இந்த நிறுவனத்தின் அதிரடி செயலினால் ஹிமாலயன் பைக்கின் விலை ரூ 2.14 லட்சமாக உயர்ந்துள்ள இது சில்வர், கிரே நிறத்தில் விற்பனைக்கு கிடைக்கும். கருப்பு , பச்சை நிற ஹிமாலயன் பைக்கின் விலை ரூபாய் 2.22 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

புல்லட்

650 ட்வின் பைக், புல்லட் ஆகியவற்றின் விலைகள் உயர்த்தாமல் பழைய விலையிலேயே கிடைக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here