பொங்கலுக்கு தயாராகும் பானை ;

0
76
பூவந்தி

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கீழடி அருகே பூவந்தியில் மண்பானைகள் தயாரிக்கும் பணி அவசரமாக நடந்து வருகின்றது.சிவகங்கை மாவட்டம் தயாரிக்கப்படும் எல்லாம் மண்பானைகளும் புகழ்பெற்றவை. இதற்கு அடுத்தபடியாக திருப்புவனம் அருகே பூவந்திதான் மண்பாண்டங்களுக்கு புகழ் பெற்றவை . பொங்கல் பண்டிகை வருவதால் பூவந்தியில் பொங்கல் பானைகள் அதிகளவில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

பொங்கல் பானை

பொங்கல் பானைகள் சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, காரைக்குடி, நாட்டரசன்கோட்டை, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்ப்பிவைக்கபடும் . இவை 50 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது .

மழை

கடந்த மூன்று மாதமாக மழையால் மண்பானை தயாரிப்பு பணிகள் நிறுத்தி வைக்க பட்டது . இப்போது மழை நின்றுவிட்டதால் தொழிலாளர்கள் பானை தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கண்மாய்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால் களிமண் எடுப்பதில் கஷ்டம் ஏற்படுகிறது.

பூவந்தி

எனவே இந்த மண்பாண்ட பொருட்களை பயன்படுத்துவது தமிழர்களின் மரபாக இருந்து வந்தது . சுற்றுச்சூழலை பாதிக்கா படாத மண்பாண்ட பொருட்களில் பொங்கல் பண்டிகையை கொண்டாட வேண்டும். பூவந்தி பானைகள் நிறத்திலும் உறுதியிலும் வாடிக்கையாளர்களை கவர்வதால் பலரும் மிகவும் விரும்பி வாங்குகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here