பொங்கல் நாளன்று ஜல்லிக்கட்டு ; 3 நாட்கள் கோலாகலம் !!!

0
77

ஜல்லிக்கட்டு

அலங்காநல்லூர் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வருடம் தோறும் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மாடுபிடிக்கும் வீரர்கள், காளைகளுக்கான பயிற்சிகள் தீவிரமடைந்துள்ளது. மதுரையில், சித்திரை திருவிழாவுக்கு அடுத்ததாக , ஜல்லிக்கட்டு மிக முக்கியமானது.

பல லட்சம் மதிப்பில் பரிசுகள்

மதுரையில் தொடர்ந்து நடக்கும் ஜல்லிக்கட்டு அங்குள்ள மஞ்சமலை ஆற்றுத்திடலில் நடைபெறும். கனமழையின் போது குப்பைகள் தேங்கி நின்ற மைதானம் சீரமைக்கப்பட்டு புதுமையாக காட்சியளிக்கிறது.

முனியாண்டி சுவாமி கோவில்

முனியாண்டி சுவாமி கோவில் திருவிழாவில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாவினை காண இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் பங்குபெறுவார்கள்.

அலங்காநல்லூர்

மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, வாடிப்பட்டி ஆகிய பகுதிகளில் அதிக ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கப்படுகின்றன. காளைகளுக்கு நடைபயிற்சி, நீச்சல் மற்றும் மண் குத்துதல் ஆகிய பயிற்சிகளை வழங்கி வருகின்றனர். காளைகளுக்கு காலை, மாலை பச்சரிசி, மண்டை வெல்லம், தேங்காய், பேரீச்சம்பழம் ஆகிய உணவுகளை வழங்கி வருகின்றனர். வீரர்கள் தங்களுக்கான காளையை அதன் வழியாக அவிழ்த்து விட்டு மாடு பிடிக்கும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here