மகனை விடுவிக்க ; போலி சான்றிதழை கோர்ட்டில் சமர்ப்பித்த தந்தை கைது !!

0
69
kaithu

கற்பழிப்பு வழக்கில் கைதான மகனை வெளியில் கொண்டு வர போலி பிறப்பு சான்றிதழை கோர்ட்டில் சமர்ப்பித்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.

கற்பழிப்பு வழக்கு

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் மாஜிநூல்லா கான். அவரது மகன் அம்ஜத் வயது 21. இவர்கள் மும்பை வடலாவில் தங்கி இருந்தார்கள். அப்பொழுது கடந்த மார்ச் மாதம் அம்ஜத் ஒரு சிறுமியை கடத்தி கற்பழித்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அம்ஜத்தின் தந்தை தனது மகன் 18 வயது நிரம்பவில்லை ஜாமீனில் விட கோரியும் கோர்ட்டில் பிறப்பு சான்றிதழை சமர்ப்பித்து இருந்தார்.

போலியான பிறப்பு சான்றிதழ்

சான்றிதழ் பற்றி விசாரணை நடத்த போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அவரின் பிறப்பிடத்திற்கு சென்று போலீசார் விசாரித்தனர். விசாரணையின் போது அது போலியான சான்றிதழ் என தெரியவந்தது. அதற்கான ஆதாரத்தை போலீசார் கோர்ட்டில்சமர்ப்பித்துள்ள.

மாஜிநுல்லா கான் மீது நடவடிக்கை

இதனை பற்றி விசாரணை நடத்திய நீதிபதி போலி பிறப்பு சான்றிதழ் சமர்ப்பித்த அம்ஜத்தின் தந்தை மீது நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here