மகிழ்ச்சியில் வடகொரியா! சோதனை வெற்றி!

0
76
ஏவுகணை

சோதனை

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தடைகளையும் மீறி வடகொரியா ஏவுகணை, அணு ஆயுத சோதனை போன்றவற்றை நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு ஓடும் ரயில், நீர்மூழ்கி கப்பலில் ஏவுகணையை அனுப்பி பரிசோதனை செய்துள்ளது.

தகவல்கள்

கொரோனா தொற்று, பொருளாதார தடைகள், உணவு பஞ்சம் நிலவி வருவதாக தகவல்கள் வெளியானது. இந்த தடைகள் காணப்பட்டாலும் சோதனையை வடகொரியா நிறுத்தவில்லை.

வெற்றி

பல தடைகளை தாண்டி கடந்த 4 மாதங்களில் இரண்டாவது முறையாக ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனையைமுன்தினம் வெற்றிகரமாக நடத்தி உள்ளதாக வடகொரியா உறுதிப்படுத்தியது. முன்தினம் ஏவப்பட்ட ஏவுகணை 700 கிலோமீட்டர் வரை பாய்ந்து இலக்கை தாக்க கூடியது.

ஆய்வாளர் கூற்று

வடகொரியா கடந்த செப்டம்பரிலும், தற்போதும் வெளியிட்டுள்ள ஏவுகணை புகைப்படங்களில் சிறிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த ஏவுகணை அணு குண்டை சுமந்து செல்லும் வகையில் வடிவமைத்துள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here