மணமகள் ரூமுக்குள் நுழைந்த போலீஸ் மயங்கி விழுந்த மாமியார்! காரணம் என்ன தெரியுமா?

0
70
mathu

மதுவிலக்கு

பீகாரில் தற்போது மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில் மக்கள் பல இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சி குடித்து வருகிறார்கள்.

ரெய்டு

இந்த மதுபான தொழிலை குறித்து போலீசார் பல இடங்களில் தீவிரமாக ரெய்டு நடத்தி வருவது வழக்கமாகி உள்ளது. திருமணங்களில் ரகசியமாக மதுபானம் பயன்படுத்தப்படுவதாக வரும் தகவல்கள் குறித்து போலீசார் ரெய்டு நடத்தி வருகிறார்கள். தற்போது ஷீலா தேவி என்ற பெண்ணின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.

அறை

அந்த வீட்டில் உள்ள படுக்கையறையில் ஷீலாவின் மருமகள் பூஜா இருந்துள்ளார். பூஜாவிற்கு திருமணம் ஆகி 5 நாட்கள் மட்டுமே ஆகிறது. போலீசார் ரெய்டு நடத்திய போது அவரது கணவர் அங்கு இல்லை. பெண் போலீசார் அங்கு வரவில்லை.

சோதனை

அந்த பெண் உள்ளே இருக்கும் நிலையில் படுக்கையறைக்குள் சென்று போலீசார் மது பாட்டில் இருக்கிறதா என சோதனை செய்துள்ளனர். குடும்பத்தினர் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பினை தெரிவித்து வருகிறார்கள்.

மாமியார்

இந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்து மாமியார் அங்கே மயங்கி விழுந்துள்ளார். அவர்களது எதிர்ப்பை மீறி போலீசார் சோதனை நடத்தியுள்ளனர்.

அவமானம்

ஊர் மத்தியில் இவ்வாறு சோதனை நடத்தியது அவர்களுக்கு அவமானமாக இருந்ததாக அவர்கள் கூறினார்கள். போலீஸ் இந்த சம்பவம் குறித்து கருத்துக்களை கூற மறுத்துள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here