மண்சரிவு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் அவதி!

0
66
mansarivu

மழை

திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி மலைப்பகுதியில் நேற்று முன்தினம் மழை பெய்ததன் காரணமாக 4 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. கொடைக்கானல் செல்லும் ரோட்டில் இதன் காரணமாக 8 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மரங்கள்

மண் அள்ளும் இயந்திரம் மூலம் அங்கிருந்த மண் அகற்றப்பட்டு மதியம் 12 மணிக்கு மேல் போக்குவரத்து துவங்கியது. ஐந்துக்கும் மேற்பட்ட ராட்சத மரங்கள் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தாமதம்

ஆத்தூர் நெடுஞ்சாலை துறையில் பணியிடங்கள் காலியாக உள்ளதால் திண்டுக்கல் பொறியாளர்கள் கவனிக்க வேண்டியுள்ளதன் காரணமாக பாதிப்புகளை சரிசெய்ய தாமதமாகிறது. நெடுஞ்சாலைத்துறை இங்கு நிரந்தரமான ஒரு குழுவை நியமிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here