மலையாள நடிகை ரீமா கல்லிங்கல் தற்போது தமிழில்

0
50

தமிழில் ரீமா கல்லிங்கல்

மலையாள சினிமாவில் கதாநாயகியாக சில வருடங்களுக்கு முன்பு நடித்து வந்தவர் ரீமா கல்லிங்கல். தமிழில் யுவன் யுவதி என்கிற பரத் நடித்த படத்தில் மட்டும் நடித்து உள்ளார். மலையாளத்தில் பிரபல இயக்குனர் ஆஷிக் அபுவை திருமணம் செய்து கொண்டார். பத்து வருடங்கள் கழித்து மீண்டும் தமிழில் சித்திரை செவ்வானம் என்ற படத்தில் நடித்துள்ளார் ரீமா கல்லிங்கல்.

சித்திரை செவ்வானம்

ஸ்டண்ட் சில்வா இந்த படத்தின் மூலம் முதன்முதலாக இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தில் சமுத்திரக்கனி, ரீமா கல்லிங்கல், சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் ஆகியோர் நடித்துள்ளனர்.

மென்மையான படம்

இந்த படத்தில் முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளேன் என்று கூறினார். ஸ்டண்ட் இயக்குனர் இயக்கும் படம் என்பதால் நாலு உதைகள் வாங்க வேண்டி இருக்கும் என நினைத்ததாக கூறினார். அப்படி இல்லாமல் முற்றிலும் மாறுபட்ட மென்மையான படமாக இதனை உருவாக்கியுள்ளதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here