மழை காலங்களில் செய்ய வேண்டிய மூச்சு பயிற்சி

0
46
yoka

மழை காலங்களிலும் அதிகாலை 4 மணி -5 மணிக்குள் எழுந்து சில முத்திரை,யோகா, மூச்சுப்பயிற்சி செய்தால் உடல் சுறுசுறுப்பாக இயங்கும்.

மூச்சு பயிற்சி செய்யும் முறை

ஸ்டெப் 1

விரிப்பில் நிமிர்ந்து அமர வேண்டும். விரிப்பில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் அமரலாம். இடது கை விரல்கள் சின் முத்திரையில் இருக்க வேண்டும். பெருவிரல் ஆள்காட்டி விரல் நுனியை இணைத்து வைக்க வேண்டும். இணைத்து வைத்த விரல்களை தவிர வேறு விரல்கள் தரையை நோக்கி இருக்க வேண்டும். வலது கையில் உள்ள பெருவிரலால் வலது நாசியை அடைக்கவும். பின் மிக மெதுவாக மூச்சை வெளிவிட வேண்டும்.

ஸ்டெப் 2

பிறகு வலது கை மோதிரவிரலால் இடது நாசியை அடைக்க வேண்டும். வலது மூக்கு வழியாக மூச்சை இழுத்து வலது மூக்கு வழியாக வெளிவிடவும்.

ஸ்டெப் 3

வலது மூக்கை பெருவிரலால் அடைத்து கொண்டு இடது மூக்கில் மூச்சை இழுக்க வேண்டும். மூச்சை இழுத்த உடன் இடது மூக்கை மோதிர விரலால் அடைத்து வலது நாசியில் மூச்சை வெளிவிட வேண்டும்.

ஸ்டெப் 4

மோதிர விரலால் இடது மூக்கை அடைத்து கொண்டு வலது நாசியில் மூச்சை இழுக்க வேண்டும். மூச்சை இழுத்த உடன் வலது நாசியை அடைத்து இடது நாசியில் மூச்சை வெளிவிட வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here