மஹிந்திரா எக்ஸ்யூவி 700 டீசல் கார்களை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள்

0
71
xuv700

புதிய கார்

கடந்த 2021 ஆகஸ்டில் மஹிந்திரா அதன் புதிய எக்ஸ்யூவி 700 காரினை அறிமுகப்படுத்தியது. இந்த காருக்கு முன்பதிவுகள் குவிந்த நிலையில், 3 மணிநேரத்திற்குள் 50 ஆயிரம் முன்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மஹிந்திரா அறிவித்தது.

முன்பதிவுகள்

தற்போது வரை 70 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. முன்பதிவுகள் குவிந்து வருவது மஹிந்திராவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், சரியான நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி கொடுக்க வேண்டும் என தலைவலியாக இருக்கும் என தெரிவித்துள்ளது.

பாதிப்பு

தற்சமயம் மொத்த ஆட்டோமொபைல் துறையும் குறைக்கடத்திகளின் பற்றாக்குறையால் சிக்கி தவித்து வருகிறது. இதனால் நிறுவனங்கள் அடைந்துள்ள பாதிப்பில் இருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை.

குறைக்கடத்திகள்

எக்ஸ்யூவி 700 காரில் அதிக அளவு குறைக்கடத்திகள் பயன்படுத்தப்படுகின்றன. அதிநவீன ஓட்டுநர் உதவி அமைப்புகளை பெரும் வேரியண்டுகளில் அதிக எண்ணிக்கையில் குறைக்கடத்திகள் உபயோகப்படுத்தப்படுகின்றன. வரும் ஜனவரி மாதத்தில் மொத்தம் 14 ஆயிரம் எக்ஸ்யூவி700 கார்களை டெலிவரி செய்ய திட்டமிட்டுள்ளது.

டெலிவரி பணிகள்

எக்ஸ்யூவி 700 காரின் பெட்ரோல் வேரியண்டுகள் கடந்த அக்டோபர் மாத இறுதியில் டெலிவரி துவங்கப்பட்டது. இந்த நிலையில் டீசல் எஞ்சின் உடனான வேரியண்டுகள் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி கொடுக்கும் பணிகள் தற்போது துவங்கப்பட்டுள்ளது.

முதல் வாடிக்கையாளர்

டீசல் எஞ்சின் எக்ஸ்யூவி700 காரை முதல் டெலிவரி பெற்றிருக்கும் வாடிக்கையாளர் சுரேஷ் சுதர் ஆகும். இவர் டீசல் மாடலின் டாப் வேரியண்டான ஏஎக்ஸ்7 ஆட்டோமேட்டிக்கை டெலிவரி பெற்றுள்ளார். அவர் மட்டுமின்றி முதலாவதாக முன்பதிவு செய்தவர்களுக்கு நாடு முழுவதும் தங்களது கார்களை டெலிவரி செய்து வருகின்றனர்.

வசதிகள்

தோற்றம், விலைகள், முதல் மாடலாக பெற்றுள்ள சில வசதிகள் மக்களை கவர்ந்திழுப்பதற்கு காரணங்களாக உள்ளது.எம்.எக்ஸ் , ஏஎக்ஸ்3, ஏஎக்ஸ்5, ஏஎக்ஸ் 7 என்ற நான்கு விதமான வேரியண்டுகளில் களமிறக்கப்பட்டுள்ளது. இதனை 5,7 இருக்கை தேர்வுகளில் பெற முடியும்.

லோகோ

தீவிர ஆலோசனைக்கு பிறகு மஹிந்திரா நிறுவனம் புதிய பிராண்டின் லோகோவை ஆண்டின் துவக்கத்தில் வெளியிட்டது. இறக்கை வடிவில் லோகோவை பெற்று வந்துள்ள முதல் மாடலாக எக்ஸ்யூவி700 விளங்குகிறது.அமேசான் -அலெக்ஸா இணைப்பு, இரு திரைகள், அதிநவீன ஓட்டுநர் அமைப்புகள் போன்ற சில அம்சங்கள் இதில் காணப்படுகிறது.

அம்சங்கள்

3டி சவுண்ட் அவுட்புட், 12 ஸ்பீக்கர் சோனி சிஸ்டம், எலக்ட்ரிக் மூலம் 6 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யும் ஓட்டுநர் இருக்கை போன்றவையும் இதில் உள்ளன. இதில் குசின் தலையணைகள், கழுத்து தலையணைகள், ஸ்டேரிங் சக்கர கவர், தரை பாய்கள்,ஸ்கஃப் தட்டுகள் போன்றவைகள் உள்ளன.

விலை மதிப்பு

இந்த சிறப்பம்சங்களை கொண்ட கார்களுக்கு கூடுதல் தொகையினை செலுத்த வேண்டி இருக்கும். இருக்கை கவர்கள் ரூ.9,250 க்கு விற்கப்படுகின்றன. ரூ.12,250 என்ற விலையிலும் தரமுள்ள இருக்கை கவர்கள் கிடைக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here