Latest Tamil News 2022 : மாட்டுப் பொங்கல் தினமான இன்று உலக புகழ்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு துவக்கம்!

0
62
jallikattu

மாட்டுப் பொங்கல்

மதுரை அருகே புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு மாட்டு பொங்கல் தினமான இன்று துவங்கப்பட்டுள்ளது.

சீருடை

இதில் 700 காளைகள் மற்றும் 300 வீரர்கள் கலந்து கொள்ளும் நிலையில் ஒவ்வொரு சுற்றிலும் வீரர்கள் வெவ்வேறு நிற சீருடை அணிந்து வருவார்கள். இந்த ஜல்லிக்கட்டில் மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த காளைகள் கலந்து கொள்கின்றன.

மருத்துவர்கள்

காளைகளின் உடல் நிலை குறித்து மருத்துவ பரிசோதனைக்காகவும், வீரர்களின் உடல் நிலை குறித்தும் பரிசோதனை செய்ய மருத்துவர்கள் தயாராக உள்ளனர்.

200424 rain tamil nadu pti3

சான்றிதழ்

மதுரை எஸ்பி தலைமையில் 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில் பார்வையாளர்கள் இரு டோஸ் தடுப்பூசி, கோவிட் நெகட்டிவ் சான்றிதழ் அவசியமாகிறது.

பரிசுகள்

ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளைக்கு கன்றுடன் பசு வழங்கப்படுகிறது. சிறந்த வீரருக்கு காரும், கடிகாரம், வெள்ளிக்காசு, தங்கக்காசு, பீரோ, பைக் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருள்கள் உரிமையாளருக்கு வழங்கப்பட உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here