மாணவர்களுக்கு அதிரடி தகவல்! பொது தேர்வு நடைபெறுமா?

0
66
kalvi

வகுப்பு

கொரோனா தொற்று பரவி வருவதால் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 1-8 வரை படிக்கும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புக்கு தடை விதித்து தமிழக முதலமைச்சர் உத்தரவை பிறப்பித்தார்.

மாணவர்கள்

கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்பிற்கு செல்கின்றனர்.

ஊரடங்கு

இந்த நிலையில் பெரும்பாலான மாவட்டங்களில் ஓமைக்ரான் தொற்றின் காரணமாக மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து வருகின்றன.

ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா, ஓமைக்ரான் தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

பொது தேர்வுகள்

ஆரம்ப வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் சூழலில் திட்டமிட்டபடி 10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வுகள் நடத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அமைச்சர் கூற்று

செய்தியாளர்களிடம் பேசிய கல்வி துறை அமைச்சர் கடந்த 2019-2020 ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்த வருடம் கட்டாயம் பொதுத்தேர்வு நடைபெறும் என்று கல்வித்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

தடுப்பூசி

நாடு முழுவதும் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ள நிலையில் ஒரே நாளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here