மாணவர்களை பிடிக்க மாறுவேட போலீஸ் காரணம் என்ன?

0
72
rayil

பணி

ரயில்களில் ரகளையில் ஈடுபடும் மாணவர்களை பிடிக்க மாறுவேடத்தில் பாதுகாப்பு படையினர் பணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர்.

புகார்

சென்னை புறநகர் ரயில்களில் மாணவர்களால் பயணிகளுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் சம்பவங்கள் குறித்து புகார்கள் தொடர்கின்றன. இதனை தடுக்க போலீசார் ஒருங்கிணைந்து நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

உயர் அதிகாரி கூறியது:

பயணிகளுக்கு மாணவர்களால் இடைஞ்சல் ஏற்படுவதை தடுக்க பல நடவடிக்கைகள் எடுத்தும் பயனற்றதாகவே உள்ளது. நேற்று அபாய சங்கிலியை இழுத்து கடும் ரகளை செய்துள்ளனர் கல்லூரி மாணவர்கள்.

மாறு வேடம்

மாணவர்களின் ரகளைகளை தடுக்க பயணியர் போல மாறு வேடத்தில் பாதுகாப்பு படையினரும், போலீசாரும் அனுப்பிவைக்கப்பட்டனர். பயணிகளுக்கு தொந்தரவாக இருந்ததால் அவர்களை பிடித்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அதிகாரி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here