மாணவியர்களை மிரட்டிய மாணவனை கொன்ற வழக்கில் 9 மாணவர்கள் கைது!

0
72
kolai

பிரேம்குமார்

மண்ணிவாக்கம் பகுதியில் வசித்தவர் பிரேம்குமார் வயது 21 ஆகும். இவர் மீனம்பாக்கம் தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்துள்ளான். டிசம்பர் 17 ல் கும்மிடிப்பூண்டி அருகே மாணவன் வெட்டி கொலை செய்து புதைக்கப்பட்டான்.

விசாரணை

வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், மாணவியருடன் ஆபாசமாக பேசி பதிவு செய்து மாணவியரை மிரட்டி பணம் பறித்தது தெரியவந்துள்ளது.

பிரச்சனை

பிரச்சனையில் இருந்து விடுபட மாணவி அசோக்குமார் என்ற மாணவனை தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளனர். மாணவியரை வைத்து நாடகமாடி பிரேம்குமாரை சுங்கச்சாவடிக்கு வரவழைத்தான்.

தாக்குதல்

மாணவியரை வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டு அசோக் மற்றும் அவனது கூட்டாளிகள் சேர்ந்து பிரேம்குமாரை டூவீலரில் கடத்தி சென்றனர். இரவு வரை பலமாக தாக்கி பின் டூவீலரில் ஏற்றி ஈச்சங்காடு கொண்டு சென்றனர்.

கைது

அசோக் மற்றும் அவனது கூட்டாளிகள் சேர்ந்து பிரேம்குமாரை வெட்டி கொலை செய்து புதைத்துவிட்டு சென்றுள்ளனர். போலீஸ் இவர்கள் மற்றும் மாணவிகள் என ஒன்பது பேரை கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here