முடி வறட்சியை தடுக்க என்ன செய்ய வேண்டும் ?

0
76

ஆண், பெண் இருவருக்கும் இன்றைய காலகட்டத்தில் தலைமுடி பராமரிப்பு என்பது மிகவும் அவசியமானதாகும் .

முடி வறட்சியடைதல் , முடி வேர்களில் அழுக்கு, முடிக்குத் தேவையான ஊட்டச்சத்து இல்லாமை, மரபியல் என முடி உதிர்வுக்கு பல காரணங்கள் இருக்கின்றன. இதில் பலரும் முடி வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. இது இருப்பவர்கள் பின்பற்ற வேண்டிய சில விஷயங்கள் மற்றும் தீர்வுகள் இதோ..

பின்பற்ற வேண்டியது

 • குளிப்பதற்கு முன் எண்ணெய் எடுத்து தலையில் மசாஜ் செய்ய வேண்டும்.பின் முடி வறட்சியாக இருக்கும் போது ஷாம்பூ பயன்படுத்தாவும்.
 • பின் ஷாம்பூ பயன்படுத்திய பிறகு சிகைக்காய் பயன்படுத்தவும்.
 • தலைமுடி சிக்காக இருக்கும்போது குளிப்பது நல்லதல்ல . குளிப்பதற்கு முன் எண்ணெய் வைத்து மசாஜ் செய்து விட்டு முடியை வாரிவிட்டு குளிக்கலாம்.
 • ஷாம்பூ போட்டபின் தலையை நன்றாக அலச வேண்டும்.
 • குளிப்பதற்கு குளிர்ந்த நீரையோ அல்லது வெதுவெதுப்பான நீரையோ பயன்படுத்த வேண்டும்.
 • தலைக்கு குளித்த பின் அடுத்த நாள் காலையிலோ தலைக்கு எண்ணெய் வைக்கவேண்டும்.

தீர்வு

 • கற்றாழை முடி வறட்சிக்கு ஒரு சிறந்த தீர்வுவாகும் . கற்றாழை ஜெல்லை தலைமுடியில் தடவி ஊறவைத்தா பிறகு குளிக்கலாம்.
 • தயிரில் ஏராளமான ஊட்டச்சத்துகள் இருப்பதால் இதையும் தலைமுடியில் தேய்த்த பின்னர் குளிக்கலாம்.
 • முட்டையின் வெள்ளைக்கருவை தலையில் தேய்த்த பின் குளிக்கலாம் .
 • மருதாணி, செம்பருத்தி இவைகள் தலைமுடிக்குத் தேவையான ஊட்டச்சத்தை தரும் .
 • பின் எண்ணெய்யை லேசாக சூடு செய்து முடியின் வேர்க்கால்களில் படும்படி மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்து குளிக்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here