முட்டை சேர்க்காமல் சுவையான ஃப்ரூட் கேக் செய்வது எப்படி?

0
69
cake

தேவையான பொருள்கள்:

மைதா – 1 கப்
வெண்ணெய் – 1/2 கப்
பேக்கிங் சோடா – 1 டீஸ்பூன்
மசாலா பொடி – 1/2 டீஸ்பூன்
தேன் – 1/2 டேபிள் ஸ்பூன்
தயிர் – 3 டேபிள் ஸ்பூன்
வெனிலா எசன்ஸ் – 1/2 + 1/4 டீஸ்பூன்
நாட்டுச் சர்க்கரை – 1/2 கப்
பேக்கிங் பவுடர் – 1 டீஸ்பூன் தண்ணீர் – 1/2 கப்


உலர் திராட்சை – 50 கிராம்
டூட்டி ஃப்ரூட்டி – 50 கிராம்
பேரிச்சம் பழம் – 25 கிராம்
பாதாம் – 25 கிராம்
பிஸ்தா – 25 கிராம்
முந்திரி – 25 கிராம்

செய்முறை:

  • ட்ரை ஃப்ரூட்ஸை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.
  • ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய், உலர் பழங்களை போட்டு தண்ணீர் ஊற்றி வெண்ணெய் கரையும் வரை அடுப்பில் வைக்க வேண்டும்.
  • இந்த உலர்பழங்கள் மென்மையாக ஆனதும் சிறிதளவு பேக்கிங் சோடாவை சேர்த்து நன்கு குளிர வைக்க வேண்டும்.
  • ஒரு சிறிய பாத்திரத்தில் தயிர், வெனிலா எசன்ஸ், மசாலாப்பொடி , உலர் பழங்களின் கலவை சேர்த்து கிளற வேண்டும்.
  • அதனுடன் பாதாம், பிஸ்தா, முந்திரி போன்றவற்றை சேர்த்து கொள்ள வேண்டும்.
  • பின்பு மைதா, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் ஆகியவற்றை சலித்து உலர் பழங்களுடன் சேர்த்து ஓரளவு கெட்டியான பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
  • பின் கேக் ட்ரேயில் கலந்து வைத்துள்ள அனைத்தையும் கொட்டி வைக்க வேண்டும்.
  • பின் மைக்ரோ ஓவனில் வைத்து பேக் செய்து எடுத்தால் முட்டை சேர்க்காத ஃப்ரூட் கேக் ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here