மூக்கு துவாரங்கள் அடைக்காமல் இருக்க லிங்க முத்திரை!

0
77
muthirai

நாசி

மூக்கிற்கு வலது நாசி, இடது நாசி என இரு நாசித்துவாரங்ககள் உள்ளன. இடப்பக்க உறுப்புகளை கட்டுப்படுத்த வலது நாசியும், வலது பக்க உறுப்புகளை கட்டுப்படுத்த இடது நாசியும் பயன்படுகிறது.

நுரையீரல்

மனித உடலின் நுரையீரல் நன்றாக இயங்குவதற்கு நாசி துவாரங்கள் முக்கிய பங்கினை அளிக்கிறது. இரு நாசிகளிலும் அடைப்புகள் இருந்தால் நுரையீரல் நன்கு இயங்காது.

லிங்க முத்திரை

விரிப்பில் நேராக நிமிர்ந்து அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு இயல்பாக நடக்கும் மூச்சை இருபது வினாடிகள் கவனிக்க வேண்டும். அதன் பிறகு கைவிரல்கள் அனைத்தையும் இணைத்து இடது கையில் உள்ள கட்டை விரலை மேல்நோக்கி வைக்க வேண்டும். இந்த முத்திரையை இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடம் வரை வைத்து கொண்டு பின் சாதாரண நிலைக்கு வர வேண்டும்.

நாடிசுத்தி பயிற்சி

இடது கை பெருவிரலையும், ஆள்காட்டி விரல் நுனியையும் இணைத்து வைக்க வேண்டும். கட்டை விரலால் வலது நாசியை அடைத்து இடது நாசி வழியாக மெதுவாக மூச்சை இழுத்து வெளிவிட வேண்டும். பின் இடது நாசியை அடைத்து வலது நாசி வழியாக மூச்சை இழுத்து மெதுவாக மூச்சை வெளிவிட வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here